இந்தியாவில் உள்ளூர் போட்டியான சையத் முஷ்டாக் அலி தொடர்நடைபெற்று வந்தது. இப்போட்டி இந்தியாவில் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் அணிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வந்தனர்.
கடந்த 29-ம் தேதி நடைபெற்ற அரையிறுதி போட்டியில் கர்நாடகா அணியும் , தமிழ்நாடு அணியும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்றனர்.நேற்று சூரத்தில் உள்ள லாலபாய் கான்ட்ராக்டர் மைதானத்தில் இறுதி போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பந்து வீச முடிவு செய்தது.இதை தொடந்து முதலில் களமிறங்கிய கர்நாடக அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இருந்து 180 ரன்கள் எடுத்து அதில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 60 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
தமிழக அணி சார்பில் முருகன் அஸ்வின் , ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.இதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழக அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 179 ரன்கள் எடுத்தது.இதனால் கர்நாடகா அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
தமிழக அணி சார்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 44 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். கர்நாடகா அணி சார்பில் ரோனிட் மோர் 2 விக்கெட்டை பறித்தார்.
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…