டோக்கியோ ஒலிம்பிக்:வட்டு எறிதலில் கமல்ப்ரீத் மிரட்டல்….!
டோக்கியோ ஒலிம்பிக் 64 மீ தூரம் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் வெற்றி பெற்றுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் கடந்த வாரம்,வீராங்கனை மீராபாய் சானு முதல் வெள்ளி பதக்கத்தை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்த நிலையில்,நேற்று குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை லவ்லினா அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.அதேபோல், பேட்மிண்டனில் பி.வி.சிந்து, அரையிறுதிக்கு முன்னேறி அவரும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
இரு பிரிவுகள்:
இந்நிலையில்,இன்று பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டிகள் நடைபெற்றன. இதில்,குரூப் ‘ஏ’ மற்றும் குரூப் ‘பி’ என இரு பிரிவுகளாக வீராங்கனைகள் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குரூப்பில் தலா 15 வீராங்கனைகள் என மொத்தம் 30 பேர் இடம் பெற்றிருந்தனர்.அதன்படி, குரூப் ‘ஏ’ பிரிவில் இந்திய வீராங்கனை சீமா புனியாவும், குரூப் ‘பி’ யில், இந்தியா சார்பில் கமல்ப்ரீத் கவுர் ஆகியோரும் இடம்பெற்றனர்.
ஆறாவது இடம்:
அதன்படி,முதலில் நடைபெற்ற குரூப் ‘ஏ’ பிரிவு போட்டியில், ஒவ்வொரு வீராங்கனையும் தலா 3 முறை வட்டு ஏறிய வேண்டும் என்பது நிபந்தனை.இதில்,இந்திய வீராங்கனை சீமா புனியா 3 சுற்றிலும் சேர்த்து சராசரியாக 60.57 மீட்டர் தூரம் வீசி ஆறாவது இடம் பிடித்தார்.ஆனால்,இப் பிரிவில் முதல் வீராங்கனையாக 63.75 மீட்டர் தூரம் வீசி குரோஷியாவின் பெர்கோவிக் முதலிடம் பிடித்தார்.
மற்றொரு பிரிவு:
இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற ‘பி’ பிரிவுக்கான போட்டியில், இந்தியாவின் கமல்ப்ரீத் கவுர் மிரட்டலாக விளையாடினார்.காரணம்,வட்டு எறிதலில் சராசரியாக 64 மீட்டர் தூரம் வீசி, ‘பி’ பிரிவின் பட்டியலில் இரண்டாவது வீராங்கனையாக இடம் பிடித்துள்ளார்.இப்பிரிவில் அமெரிக்காவின் அல்மன் 66.42 தூரம் வீசி முதலிடம் பிடித்துள்ளார்.
இதனால்,கமல்ப்ரீத் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதால் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கத்தை உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#TeamIndia | #Tokyo2020 | #Athletics
A 64m long throw lands National Record Holder #KamalpreetKaur in the Finals of the Discus Throw event. Let’s keep cheering on our champ as she prepares to #TakeoverTokyo! #AllTheBest ???????????????????? #RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India pic.twitter.com/GcF9DrpLCr
— Team India (@WeAreTeamIndia) July 31, 2021