கேல் ரத்னா விருது : ஸ்ரீ ராஜேஷ் மற்றும் தீபிகா ஆகியோரை பரிந்துரை செய்த ஹாக்கி இந்தியா…!
ஹாக்கி இந்தியா, இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பி.ஆர்.ராஜேஷ், மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை தீபிகா ஆகியோரின் பெயர்களை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.
தேசிய அளவில் விளையாட்டுத் துறையில், சிறந்த முறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நோக்கில், மத்திய அரசால் வழங்கப்படக் கூடிய மிக உயரிய விருது தான் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. முன்னாள் இந்திய பிரதமர், மறைந்த ராஜீவ் காந்தி அவர்களின் நினைவாக இவ்விருதுக்கு இந்த பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது ஆகிய விருதுகளும் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகளுக்கு அந்தந்த விளையாட்டு அமைப்பு சார்பில் தகுதிவாய்ந்த வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றன.
அந்த வகையில், ஹாக்கி இந்தியா, இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பி.ஆர்.ராஜேஷ், மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை தீபிகா ஆகியோரின் பெயர்களை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.