தோனி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்.!
- இந்தியா, நியூசிலாந்துக்கு இடையேயான ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இதில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் 88 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதுவே நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் அடித்த அதிகப்பட்ச ரன்னாகும்.
இந்தியா, நியூசிலாந்துக்கு இடையேயான 5, டி20 போட்டிகளில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் டி20 தொடரை வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதையடுத்து இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்னர் முதலில் களமிறங்கிய இந்திய அணி 347 ரன்கள் குவித்தது. இதில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் 88 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதுவே நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் அடித்த அதிகப்பட்ச ரன்னாகும். இதற்கு முன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 85 ரன்கள் அடித்திருந்தார். அதை தற்போது கே.எல். ராகுல் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய விக்கெட் கீப்பர்கள் அடித்த அதிகபட்ச ரன்கள், கே.எல்.ராகுல் – 88*, தோனி – 85*,84*,79*,68,56,50 போன்ற ரன்களை அடித்துள்ளனர்.