Junior World cup Hockey: அரையிறுதி போட்டியில் ஜெர்மனியிடம் இந்தியா வீழ்ந்தது..!
அரையிறுதி போட்டியில் ஜெர்மனியிடம் நடப்பு சாம்பியனான இந்தியா தோல்வியடைந்தது.
12-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஜெர்மனியை சந்தித்தது. கால்இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது.
இந்நிலையில், அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா அரையிறுதியில் ஆறு முறை பட்டம் வென்ற ஜெர்மனிக்கு எதிராக 2-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. கடைசி நிமிடத்தில் பாபி ஒரு கோலை அடித்தார். ஆனால், அது ஆறுதல் கோலாகவே அமைந்தது.
முதல் கால்பகுதி முடிந்தபோது 1-0 என ஜெர்மனி முன்னிலையில் இருந்தது. ஜெர்மனிக்கு இரண்டு பெனால்டி வாய்ப்பு கிடைத்ததில் ஒன்றை கோலாக மாற்றினார். ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் ஜெர்மனி ஆறு முறை சாம்பியனாகவும், இந்தியா நடப்பு சாம்பியனாகவும் உள்ளது.