ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர்..! 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.!

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.
இந்தியாவின் ஆடவர் ஹாக்கி அணி ஜூனியர், நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது. இது இந்தியாவின் 4வது ஜூனியர் ஆசிய கோப்பை சாம்பியன் பட்டம் ஆகும்.
இந்தியா அணி சார்பில் அங்கத் பிர் சிங், அரைஜீத் சிங் ஹண்டால் ஆகியோர் தலா ஒரு கோல் அடிக்க, பாகிஸ்தான் அணியின் அப்துல் பஷரத் ஒருமுறை மட்டுமே கோல் அடிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
முன்னதாக, இந்திய அணி 2004, 2008 மற்றும் 2015ம் ஆண்டில் நடைபெற்ற போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. மறுபுறம், பாகிஸ்தான் அணி 1988, 1992, 1996 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sweet Victory ✌️
India win a well fought encounter against arch nemesis Pakistan in the finals of Men’s Junior Asia Cup 2023.#HockeyIndia #IndiaKaGame #AsiaCup2023 #GoldToIndianColts#GloryToIndianColts pic.twitter.com/LYcGHypdcW
— Hockey India (@TheHockeyIndia) June 1, 2023