ரூ.60 லட்சத்து 70 ஆயிரத்துக்கு ஏலம் போன ஜோஸ் பட்லர் ஜெர்சி.!
இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் 2019 உலகக்கோப்பை தொடரின் கடைசி போட்டியின் போது தான் அணிந்திருந்த ஜெர்சி ஏலத்தில் விட்டு லண்டனில் உள்ள ராயல் பிராம்ப்டன் மற்றும் ஹேர்பீல்ட் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க பணம் அளிக்க முடிவு செய்தார். இதனிடையே இங்கிலாந்தில் கொரோனா வைரசால் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் ஜோஸ் பட்லர் தன்னால் முடிந்த உதவியை செய்வதற்காக இதுபோன்ற முடிவு எடுத்துள்ளார்.
இதையடுத்து ஜோஸ் பட்லரின் இந்த ஜெர்சி 65,000 பவுண்டுக்கு (80,000 அமெரிக்க டாலர்) ஏலம் போனது. இந்திய மதிப்புப்படி கிட்டத்தட்ட ரூ.60 லட்சத்து 70 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்துள்ளது. பட்லர் முன்னதாக அந்தப் போட்டியில் தான் அணிந்திருந்த ஜெர்சியை விற்பனை செய்ய முடிவெடுத்து eBay-இல் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து பேசிய ஜோஸ் பட்லர், இந்த ஜெர்சி எனக்கு மிகவும் ஸ்பெஷலானது என்றும் ஆனால் இப்போது இந்த ஜெர்சிக்கு இன்னும் மதிப்பு அதிகமாகி உள்ளது என தெரிவித்தார். முக்கியமான நேரத்தில் இந்த ஜெர்சி உதவிகரமாக இருந்துள்ளது என்று கூறியுள்ளார்.
To bid on my World Cup shirt in aid of the @RBHCharity go to … https://t.co/9E4vuoVaPn
— Jos Buttler (@josbuttler) March 31, 2020