வினேஷுக்கு வெள்ளி பதக்கம் வேண்டும்.! விதிமுறைகளை மாற்றுங்கள்…

Jordan Burroughs - Vinesh Phogat

பாரிஸ் : இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் குறித்த கருத்துக்கள் இன்னும் பலமாக விளையாட்டு மற்றும் பொது அரங்குகளில் எதிரொலித்து கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் உறுதி என்று இருந்த நிலையில் 100 கிராம் எடை அனைத்து இந்தியர்களின் கனவையும் பொய்யாக்கிவிட்டது.

50 கிலோ மல்யுத்த போட்டி எடைப்பிரிவில் வினேஷ் போகத் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக கூறி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்த வினேஷை ஒலிம்பிக் கமிட்டி தகுதி நீக்கம் செய்து, வினேஷிடம் அரையிறுதியில் தோற்ற கியூபா வீராங்கணையை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவித்து இறுதி போட்டியும் நிறைவடைந்துவிட்டது.

இந்திய ஒலிம்பிக் சங்கம் எவ்வளவோ முயற்சி செய்தும் வினேஷ் தகுதி நீக்கத்தில் இருந்து ஒலிம்பிக் கமிட்டி பின்வாங்கவில்லை. இதனை அடுத்து, நேற்று விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தை (Court of Arbitration for Sport (CAS)) வினேஷ் போகத் நாடியுள்ளார். முதலில் இறுதி போட்டிக்கு தன்னை அனுப்ப கோரிய கோரிக்கையை மாற்றி , தற்போது, இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற தனக்கும் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் என்று தற்போது PTI செய்தி நிறுவனம் வாயிலாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதே வெள்ளி பதக்க கோரிக்கையை, அமெரிக்க குத்துச்சண்டை வீரர் ஜோர்டான் பர்ரோஸும் வலியுறுத்தி உள்ளார். வினேஷ் போகத்திற்கு வெள்ளி பதக்கம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்த ஜோர்டான், அதற்காக குத்துசண்டை விளையாட்டு விதிமுறைகளை மாற்றவும் கோரிக்கை வைத்தார்.

அவர் குறிப்பிட்டபடி உலக குத்துசண்டை சம்மேளத்தில் மாற்றப்பட வேண்டிய விதிமுறைகள் என கூறுகையில்,

  • 1 கிலோ எடை வரையில் எடையாளவில் விலக்கு அளிக்க வேண்டும்.
  • வீரர்களின் எடை சரிபார்ப்பை காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை என இருப்பதை மாற்ற வேண்டும்.
  • இறுதிப் போட்டியாளர் திடீரென எடை குறைந்தால் இறுதிப் போட்டிகளில் தோல்வி ஏற்படும் நிலை உள்ளது அதனை மாற்ற வேண்டும்.
  • அரையிறுதி வெற்றிக்குப் பிறகு, 2வது நாளில் எடை தவறவிட்டாலும் இறுதிப் போட்டியாளர்கள் இருவரின் பதக்கங்களும் உறுதி செய்யப்பட வேண்டும்.
  • வினேஷுக்கு வெள்ளிப் பதக்கம் கொடுங்கள்.

மேற்கண்ட விதிமுறைகளை மாற்றியமைத்து வினேஷுக்கு வெள்ளி பதக்கம் அளிக்க வேண்டும் என அமெரிக்க குத்துசண்டை வீரர் ஜோர்டான் உலக குத்துசண்டை சம்மேளனத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்