கோலியுடன் ஒப்பிடுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.! பாபர் அசாமுக்கு அறிவுரை கூறிய மியான்தத் .!
- இந்திய அணி கேப்டன் விராட் கோலி போல பாபர் அசாம் ஸ்ட்ரோக் மற்றும் ஷாட்டுகள் உள்ளது என பலர் கூறி வருகின்றனர்.
- விராட் கோலியுடன் ஒப்பிடுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என முன்னாள் வீரரும் , பயிற்சியளருமான மியான்தத் கூறியுள்ளார்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி போல பாபர் அசாம் ஸ்ட்ரோக் மற்றும் ஷாட்டுகள் உள்ளது என பலர் கூறி வருகின்றனர். இதனால் தன்னை விராட் கோலியுடன் ஒப்பிட வேண்டாம் என பாபர் அசாம் கூறியுள்ளார். அவருடன் ஒப்பிட்டால் எனது ஆட்டத்தின் திறன் குறைந்து விடும் என கூறினார்.
இந்நிலையில் விராட் கோலியுடன் ஒப்பிடுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என முன்னாள் வீரரும் , பயிற்சியளருமான மியான்தத் கூறியுள்ளார். இதுகுறித்து மியான்தத் கூறுகையில் “பாபர் அசாம் சிறப்பான பேட்ஸ்மேன். தனது நாட்டிற்காக அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும். என்னுடைய அனுபவத்தை வைத்து நான் சொல்கிறேன்.
என்னை யாருடனும் ஒப்பிட்டு பேசினால் நான் கவலைப்படமாட்டேன். தொடர்ந்து அணிக்காக சிறப்பாக விளையாடுவேன். என்னுடைய பேட் அதுபற்றி பேசும். இதைத் தான் பாபர் அசாமுக்கு நான் கூறுகிறேன்.ஒப்பிட்டு குறித்து பேசுபவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. இதுதான் என்னுடைய அறிவுரை. அதில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு அதிக அளவில் ரன் குவிக்க வேண்டும் . அதற்காக கடினமாக உழைக்க வேண்டும்” என கூறினார்.