பாரிஸ் : இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியில் ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்ப்பார்த்த ஒரு போட்டி தான் எட்டி எறிதல், அதற்கு மிக முக்கிய காரணம் நீரஜ் சோப்ரா ஏனென்றால் கடந்த 2020ல் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தொடரில் இந்திய சார்பாக விளையாடிய இவர் 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
இதனால் அவர் தடகள போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். மேலும், ஒட்டுமொத்த இந்தியர்களாலும் ‘தங்கமகன்’ என்று அழைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இந்த பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் ஈட்டி எறிதல் போட்டிக்கான தகுதி சுற்று நடைபெற்றது.
அதில் நீரஜ் சோப்ரா 89.34 மீட்டர் எறிந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். அதனை தொடர்ந்து இன்று ஈட்டி எறிதலில் இறுதி போட்டியானது நடைபெற்றது. இதில் ஒரு வீரருக்கு 6 வாய்ப்புகள் கொடுக்கப்படும்.
அதன்படி நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பில் கோட்டை தாண்டியதால் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அதனை தொடர்ந்து அவர் வீசிய 2-வது த்ரோவில் 89.45 மீட்டர் எறிந்து 2-ஆம் இடம் பிடித்தார். இவருக்கு முன் பாகிஸ்தான் வீரரான ஹர்சத் நதீம் 92.97 மீட்டர் எறிந்து ஒலிம்பிக் தொடரின் வரலாற்று த்ரோவை பதிவு செய்தார்.
அதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக அவர் தொடர்ந்து எறிந்த 3 த்ரோவிலும் கோட்டை தாண்டினார். மேலும், கடைசியாக அவர் எறிந்த த்ரோவிலும் அவர் சரியாக எறியவில்லை. இதன் காரணமாக அவர் 2-ஆம் இடத்தில் நீடித்தார்.
இதன் மூலம் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார். நடைபெற்று வரும் இந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியா வென்ற முதல் வெள்ளிப் பதக்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அணி இந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சுஷீல் குமார், பிவி சிந்துவுக்கு பிறகு தனி நபர் பிரிவில் 3-வது தடகள வீரராக தொடர்ந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா. பல காயங்கள் கடந்த வருடம் இவர் சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்து தற்போது வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
மேலும், தங்கம் கிடைக்கும் என இந்தியா மக்கள் எதிர்ப்பார்த்த நிலையில் தற்போது வெள்ளிப் பதக்கம் கிடைத்தால் சற்று வருத்தத்தில் இருந்தாலும் வெள்ளிப் பதக்கம் வென்றதன் காரணமாக அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…