மீண்டும் அணியில் களமிங்கிய ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் மார்க் வூட் ..!

Default Image

வருகின்ற டிசம்பர் 26 -ம் தேதி இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்று பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்த சுற்றுப்பயணத்திற்கான  17 பேர் கொண்ட டெஸ்ட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

அதில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் மார்க் வூட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆஷஸ் தொடரில்  ஆண்டர்சன்  575 ரன்களுடன் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார். ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

இப்போட்டியில் இங்கிலாந்து அணி  1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர்.இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். இடது முழங்கால் காயம் காரணமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட் மீண்டும் அணியில் இடம் பிடித்தார். விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவும் திரும்பினார். இதனால் லங்காஷயர் சீமர் சாகிப்  நீக்கப்பட்டார்.

இப்போட்டியில்  மார்க் அவர் அணியுடன் பயணம் செய்வார் மற்றும் சுற்றுப்பயணத்தில் மருத்துவ ஊழியர்களுடன் பணிகளைத் தொடருவார் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்