மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்! வேதனையில் ரசிகர்கள்!
20 ஆண்டுகளுக்கு பிறகு குத்துச்சண்டை போட்டியில் களமிறங்கிய முன்னாள் உலக ஹெவி வெயிட் சாம்பியனான மைக் டைசனை யூடியூப்பர் ஜேக்பால் வீழ்த்தினார்.
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால் இருவரும் மோதிக்கொள்ளும் தொழில்முறையிலான குத்து சண்டைபோட்டியானது இன்று இரவு 8 மணி அளவில் அமெரிக்காவில் உள்ள டெக்சர்ஸ் மாகாணத்தில் எர்லிங்டன் நகரில் இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு நடைபெற்றது.
இந்த போட்டியில் மைக் டைசன் விளையாடுவதன் காரணமாகவே போட்டியின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால், மைக் டைசன் இதுவரை தனது குத்துச் சண்டை வரலாற்றில் 58 போட்டியில் விளையாடி 50 போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறார். தில் 44 போட்டியில் எதிரணி வீரரை ‘நாக்-அவுட்’ முறையில் வீழ்த்தி இருக்கிறார்.
எனவே, அவருடைய விளையாட்டுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தொடர்ச்சியாகப் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த மைக் டைசன் கடந்த 20 ஆண்டுகளாக தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக விளையாடாமல் இருந்தார். இதனையடுத்து மீண்டும் தான் களத்தில் இறங்குவதாகவும், அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பாலை எதிர்கொள்ளத் தான் தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.
மைக் டைசன் திரும்பி வந்து விளையாடுகிறார் என்றவுடன் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் போட்டியைப் பார்த்தனர். இந்த போட்டியில் அவர் ஜேக்பாலை வீழ்த்தி வெற்றிபெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், மைக் டைசன் இந்த போட்டியில் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
இவர்கள் இருவரும் மோதிக்கொள்ளும் இந்த போட்டியின் அறிமுக விழாவில், ஜேக் பாலின் கன்னத்தில் மைக் டைசன் அறைந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, போட்டி கண்டிப்பாகச் சவாலாக இருக்கும் என எதிர்பார்ப்பைக் கிளப்பி இருந்தது. அதைப்போலவே இருவரும் ஒருவருக்கொருவர் டஃப் கொடுத்து விளையாடினார்கள்.
மொத்தமாக, இந்த போட்டியில் 8 சுற்றுகள் நடைபெற்ற நிலையில், இப்போட்டியில் 79-73 என்ற புள்ளிக்கணக்கில் டைசன் தோல்வியைத் தழுவினார். அவரை வீழ்த்தி ஜேக் பால் அபார வெற்றி பெற்றார். வெற்றிபெற்ற அவருக்கு அவருடைய ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.