‘இது விளையாட்டின் ஒரு பகுதி’ ..! தகுதி நீக்கத்திற்கு பின் மனம் திறந்த வினேஷ் போகத்..!

Published by
அகில் R

பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிசில் இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியானது நடைபெற்று வருகிறது. இதில் இன்று மகளீருக்கான 50 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்த போட்டியில் இந்திய அணி சார்பாக வினேஷ் போகத் விளையாடி வந்தார்.

இதில், நேற்றிரவு நடைபெற்ற 50 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்த அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

அதை தொடர்ந்து இன்று நடைபெற இருந்த இறுதி போட்டிக்கு முன் உடல் தகுதி பரிசோதனையில் வினேஷ் போகத் 100 கிராம் அதிகம் இருந்ததால் அவரை சர்வேதச ஒலிம்பிக் கமிட்டி தகுதி நீக்கம் செய்திருந்தது.

இதைதொர்ந்து, பலர் வினேஷ் போகத்திற்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர். மேலும், அவர் இறுதி போட்டிக்காக அவரது எடையை குறைக்க முன்தினம் இரவு அவர் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதால் நீர்சத்து குறைபாடு காரணமாக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்டதை குறித்து அப்போது அவர் எதுவும் பேசவில்லை. ஆனால் தற்போது அவர் இந்திய பயிற்சியாளர்களிடம் பேசியதாக, பயிற்சியாளர்கள் கூறி உள்ளனர். இது குறித்து இந்திய பயிற்சியாளர்கள் பேசிய போது, “தகுதி நீக்கம் மல்யுத்தக் குழுவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த செய்தி வெளியான பிறகு வீராங்கனைகள் மிகவும் மோசமாக உணர்ந்தார்கள். நாங்கள் வினேஷைச் சந்தித்து ஆறுதல் கூற முயற்சித்தோம். அவர் தைரியமாக இருக்கிறாள். மேலும், அவர் எங்களிடம்,’நான் பதக்கத்தைத் தவறவிட்டது துரதிஷ்டம் தான். ஆனால் இது விளையாட்டின் ஒரு பகுதி’ என்று எங்களிடம் வினேஷ் போகாத் கூறினார்” என பயிற்சியாளர்கள் கூறி இருக்கின்றனர்.

Published by
அகில் R

Recent Posts

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

2 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

2 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

5 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

5 hours ago

மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…

6 hours ago

ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…

7 hours ago