தற்போது கோலி தலைமையிலான இந்திய அணி நியூஸிலாந்தில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகின்றனர்.இந்த டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளும் ஆக்லாந்தில் நடைபெற்றது.
விளையாடிய இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றியை பதிவு செய்து உள்ளது.இன்று மூன்றாவது டி 20 போட்டியில் ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்திய வீரர் சாஹல் நேற்று வீரர்கள் வரும் பேருந்தில் இருந்து வீடியோ ஒன்று வெளியிட்டார்.
அந்த வீடீயோவை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது.அந்த வீடீயோவில் இந்திய வீரர்கள் பேருந்தில் செல்லும் போது சாஹல் ஒவ்வொரு வீரரிடமும் சென்று பேசிக் கொண்டே வருகிறார். இறுதியில் பேருந்தின் கடைசி இருக்கைக்கு சென்று இது தோனியின் சீட். இதில் நாங்கள் யாரும் அமர மாட்டோம். இந்த இடம் அவருக்குரியது அவரை நாங்கள் மிஸ் பன்றோம் என கூறினார்.இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியஅணி அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் மோதி தோல்வியை தழுவி வெளியேறியது. உலகக்கோப்பை போட்டி முடிந்த தோனி ஓய்வு பற்றிய பேச்சுக்கள் தொடங்கியது.
உலகக்கோப்பை போட்டி முடிந்தவுடன் எந்தவித தொடரிலும் தனது பெயரை பரிசீலிக்க வேண்டாம் என கூறியதாக தகவல் வெளியானது.அதற்கேற்ப தோனியும் ராணுவத்தில் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக கூறி மேற்கிந்தியத்தீவுகள் விளையாடாமல் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டார். அதன்பின்னர் இந்திய அணி விளையாடிய இந்த வித தொடர்களிலும் அவர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான வீரர்களின் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலிலும் தோனி பெயர் இல்லை. இதனால் தோனி இனிமேல் இந்திய அணியில் விளையாடுவாரா..? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…