“வெளியே அனுப்புவது சந்தோசம் தான்”…பெங்களூர் குறித்து எமோஷனலாக பேசிய க்ளென் மேக்ஸ்வெல்!
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி க்ளென் மேக்ஸ்வெல்லை தக்க வைக்காத நிலையில் அது குறித்து ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் எமோஷனலாக பேசியுள்ளார்.
பெங்களூர் : ஆஸ்திரேலியாவுக்காக என்றால் அதிரடி பேட்டிங்..ஆர்சிபிக்கு என்றால் பிஜிலி வெடி பேட்டிங்கா? என்கிற அளவுக்கு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் க்ளென் மேக்ஸ்வெல் மோசமாக பேட்டிங் செய்து வந்தார். 10 போட்டிகளில், அவர் 5.78 என்ற சராசரியிலும் 120.93 என்ற மோசமான ஸ்ட்ரைக் ரேட்டிலும் வெறும் 52 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது எந்த அளவுக்கு மோசமான பேட்டிங் என்பதைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.
எனவே, இதனை ஒரு காரணமாக வைத்துத் தான் பெங்களூர் அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் பட்டியலில் க்ளென் மேக்ஸ்வெல்லை தக்க வைக்காமல் விடுவித்தனர். எனவே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடுவாரா? என்பது சந்தேகம் தான். இந்த சூழலில், பெங்களூர் அணி தன்னை விடுவித்தது குறித்து சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் க்ளென் மேக்ஸ்வெல் பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசியதாவது ” பெங்களூர் அணி என்னைத் தக்க வைக்கவில்லை என்ற அறிவிப்பு வந்த பிறகு அணியின் மூத்த அதிகாரிகளான மோ போபாட் மற்றும் ஆண்டி ஃபிளவர் எனக்கு Zoom கால் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது என்ன காரணத்துக்காக என்னைத் தக்கவைக்கவில்லை என்ற காரணத்தை என்னிடம் தெளிவாகப் பேசினார்கள். அவர்களுடன் பேசும்போது கொஞ்சம் மகிழ்ச்சியாக இந்த முடிவு குறித்து கோபம் எதுவும் வராதது போலப் பேசியது பிடித்திருந்தது.
அவர்கள் என்னிடம் கூறிய முக்கிய விஷயமே இந்த முறை அணி வீரர்கள் மட்டுமில்லை அணியில் உள்ள முக்கிய அதிகாரிகளையும் மாற்ற முடிவு செய்திருப்பதையும் கூறினார்கள். என்னை இந்த முறை தக்க வைத்துக்கொள்ளாமல் விடுத்துள்ளது எனக்கு மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது. ஏனென்றால், அணியில் நல்ல வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே, அதனைப் பார்க்கும்போது நான் தக்க வைக்கப்படாதது எனக்கு வருத்தம் இல்லை .
ஆனால், எனக்குத் தொடர்ச்சியாகப் பெங்களூர் அணியில் தான் விளையாடவேண்டும் என்பது ஒரு ஆசையாக இருந்தது. அணிக்காக விளையாடியபோது வீரர்களுடன் நான் பழகிய அந்த நினைவுகள் மற்றும் நான் விளையாடிய விளையாட்டு மிகவும் சந்தோசமாக விளையாடினேன், திரும்பவும் அந்த அணிக்காக விளையாட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் என்னைத் தேர்ந்தெடுக்கும் உரிமை என்னிடம் இல்லை அணி நிர்வாகம் தான் முடிவு செய்யவேண்டும்” எனவும் க்ளென் மேக்ஸ்வெல்சற்று எமோஷனலாக தெரிவித்தார்.