யூரோ 2020 கோப்பை கால்பந்து போட்டி;இறுதி போட்டிக்கு முன்னேறியது இத்தாலி அணி…!
யூரோ 2020 கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி இத்தாலி அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
லண்டனில் உள்ள வெம்ப்லி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற யூரோ 2020 கோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் மோதின.
ஆரம்பத்தில் 1-1 என்ற புள்ளி கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.முதல் பாதியில் ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்திய பின்னர், ஃபெடரிகோ சிசா 60 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இத்தாலி அணியை முன்னிலை படுத்தினார்.மேலும்,பெனால்டி அடிப்படையில் இத்தாலி அணி 4-2 என்ற புள்ளி கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றி குறித்து,இத்தாலி பயிற்சியாளர் ராபர்டோ மான்சினி கூறுகையில் :”இந்த வெற்றியானது கடந்த மூன்று ஆண்டுகளில் எங்களுடன் பணியாற்றிய விளையாட்டு வீரர்கள் மற்றும் அனைவரையும் சேரும்.ஏனெனில் இது எந்த வகையிலும் எளிதானது அல்ல.எங்களால் இதை செய்ய முடியும் என்று கிட்டத்தட்ட யாரும் நம்பவில்லை.ஆனால்,நாங்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளோம்”,என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து,லண்டன் நகரில் இன்று நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகள் ஒன்றையொன்று எதிர்கொள்கின்றன.இதில் வெற்றி பெறும் இங்கிலாந்து அல்லது டென்மார்க் அணியுடன் இத்தாலி அணி வரும் ஞாயிற்றுக்கிழமையன்று இறுதி போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.