யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தியது இத்தாலி!
- யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஆறு பிரிவாக நேற்று நடைபெற்றுள்ளது.
- இதில் 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை இத்தாலி அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
24 நாடுகள் பங்கேற்க கூடிய ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று உள்ளது. இத்தாலியின் ரோம் நகரில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் துருக்கி மற்றும் இத்தாலி அணிகள் இடம் பிடித்துள்ளன. இடைவேளை நேரம் வரை இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. அதன் பின்பதாக இடைவேளைக்குப்பின் பின் துருக்கியின் தடுப்பணைக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
அந்நேரத்தில் இத்தாலி வீரர் பெரார்ட்டி வேகமாக ஷார்ட் கொடுத்துள்ளார். இதனை இத்தாலி வீரர் தன் நெஞ்சால் தடுக்க முயற்சித்தும் பந்து கோலுக்குள் சென்றதன் மூலம், இத்தாலிக்கு முதல் கோல் கிடைத்துள்ளது. அதன் பின் 66 ஆவது நிமிடத்தில் சீரோ இம்மொபைல் ஒரு கோலும், 79 வது நிமிடத்தில் லாரன்சோ இன்சிக்னி ஒரு கோலும் அடித்துள்ளார். இவ்வாறு யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 3-0 என்ற கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தி இத்தாலி அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த போட்டியில் துருக்கிய அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை.