யூரோ கோப்பை கால்பந்து – ஸ்பெயினை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இத்தாலி..!
யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயினை தோற்கடித்து இத்தாலி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 16 ஆவது சாம்பியன்ஷிப் போட்டி தற்போது தீவிரமாக நடைபெறுகிறது. இதில் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த போட்டியில் முதல் அரையிறுதி சுற்று இன்று அதிகாலை இந்திய நேரப்படி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் அணி மற்றும் இத்தாலி அணி மோதியது. இதில் முதல் ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
பின்னர் இரண்டாவது ஆட்டத்தில் இத்தாலி வீரர் பெட்ரிகோ சிய்சா ஆட்டத்தின் 60 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்க ஸ்பெயின் அணியின் அல்வாரோ மொராட்டா 80 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமமாக இருந்தனர்.
பின்னர் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன் காரணத்தால் பெனால்டி சூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணி ஸ்பெயின் அணியை அபாரமாக தோற்கடித்தது. இதனால் இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது இத்தாலி அணி. மேலும், இரண்டாவது அரையிறுதி போட்டி நாளை இங்கிலாந்து-டென்மார்க் இடையே நடைபெற உள்ளது.