இந்தியாவில் நடைபெற வாய்ப்பு அதிகம் !! இந்திய செஸ் சம்மேளனம் தகவல் !!
Chess Championship 2024 : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தேவ் படேல் தெரிவித்து இருக்கிறார்.
கனடாவில் டொராண்டோ நகரில் நடத்தப்பட்ட பிடே கண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரரும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் விரருமான குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த பிடே கேண்டிடேட்ஸ் தொடரில் 8 வீரர்கள் கலந்து கொண்டு மோதினார்கள். ஒவ்வொரு வீரரும் தலா 2 முறை அவருகளுக்குள் மோதிக்கொள்ள வேண்டும்.
இந்த சுற்றின் முடிவில் வெற்றி பெறுபவர் அதாவது முதல் இடத்தில் இருக்கும் அந்த நபர் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் உலகப்புகழ் பெற்ற கிராண்ட் மாஸ்டரான டிங் லிரினை எதிர்த்து விளையாடலாம். இந்த தொடரின் முடிவில் குகேஷ் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதியில் உலகச்செஸ் நடப்பு சாம்பியனான டிங் லிரினுடன், குகேஷ் விளையாட உள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி மேற்கொண்டு வருவதாக இந்திய செஸ் சம்மேளனத்தின் செயலாளரான தேவ் படேல் நேற்று தெரிவித்தார். இதைப் பற்றி அவர் கூறுகையில்,” நடைபெற இருக்கும் இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியாவில் நடத்துவது தொடர்பாக சர்வதேச செஸ் சம்மேளனத்திடம் பேசி இருக்கிறோம்.
இந்த செஸ் போட்டி இந்தியாவில் நடந்தால் நிச்சயம் ஒரு மிகச் சிறப்பான விஷயமாக அமையும். மேலும், இந்தியாவில் குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் இந்த இறுதி போட்டி நடைபெற வாய்ப்பு இருக்கிறது, என்று நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய செஸ் சம்மேளனத்தின் செயலாளரான தேவ் படேல் பேசி இருந்தார்.
கடந்த 2013-ம் ஆண்டில் சென்னையில் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாத் ஆனந்தம், நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் இடையேயான உலகத்தை சாம்பியன்ஷிப் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் மேக்னஸ் கார்ல்சன், ஆனந்தை வீழ்த்தி வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.