#ISL கால்பந்து : சென்னைக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு அணி..!
ஐஎஸ்எல் (ISL)2023 -2024 கான கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று 7.30 மணிக்கு சென்னையின் எப்சி மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதுகிறது. இன்று இரவு நடைபெறும் இந்த போட்டியானது பெங்களுரு ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறுகிறது.
TNPL Auction : வரலாறு காணாத விலைக்கு ஏலம் போன தமிழக வீரர்கள்.! சாய் கிஷோர் நடராஜன் அசத்தல்.!
இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் கடைசியாக இருந்தாலும், இரு அணிகளுக்கும் இடையே நடக்கும் போட்டியானது ரசிகர்களுக்கு விருந்தாகவே இருந்து வருகிறது. சென்னையின் எப்சி அணி இதுவரை 12 போட்டியில் விளையாடி 3 வெற்றி, 3 டிரா, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்திலும், பெங்களூரு எப்சி அணி 13 போட்டிகளில் விளையாடி 6 தோல்வி, 5 டிரா, வெறும் 2 வெற்றிகளுடன் 11 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 11-வது இடத்திலும் உள்ளது.
கடைசியாக பெங்களூரு எப்சி அணி பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. அதே போல் சென்னையின் எப்சி அணியும் 0-3 என்ற கோல் கணக்கில் மும்பை அணியிடம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தோல்விகளை சந்தித்த இரு அணிகளும் வெற்றிக்கான முனைப்பில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கின்றன.
இதற்கு முன்பாக இந்த சீசனில் கடந்த டிசம்பர் 13-ம் தேதி நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை தோற்கடித்தது. இன்று இரவு நடக்கவிருக்கும் இந்த போட்டியில் பெங்களூரு எப்சி அணியுடன் 2-வது முறையாக சென்னையின் எப்சி அணி மோதுகிறது. இந்த போட்டியில் சென்னை அணியை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது பெங்களூரு அணி.