ஐஎஸ்எல் கால்பந்து:கேரளாவை வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டதை ருசித்த ஹைதராபாத்!

Default Image

இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) கோப்பைக்கான கால்பந்து போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் கேரளா பிளாஸ்டர்ஸை வீழ்த்தி ஹைதராபாத் எஃப்சி தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இரு அணிகள் மோதல்:

கோவாவில் உள்ள ஃபடோர்டா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஐஎஸ்எல் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர் மற்றும் ஹைதராபாத் எஃப்சி அணிகள் மோதின.

முதல் பாதியில் கோல் ஏதும் இல்லாத நிலையில் 69-வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு ராகுல் கேபி அசத்தலான கோல் அடித்தார். அதன்பின்னர்,88-வது நிமிடத்தில்,ஹைதராபாத் எஃப்சியின் டவோரா கோல் ஒன்றை அடித்து சமன் செய்தார்.120 நிமிட கால்பந்து போட்டிக்கு பிறகு,இறுதிப் போட்டி இரு அணிகளுக்கும் இடையே பெனால்டி ஷூட் அவுட் ஆனது.

முதல் கோப்பை:

கடைசியில்,3-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சியை வீழ்த்தி ஹைதராபாத் எஃப்சி தனது முதல் ஐஎஸ்எல் கோப்பையைக் வென்றுள்ளது.சாம்பியன் பட்டம்என்ற ஹைதராபாத் அணிக்கு ரூ.6 கோடியும்,ரன்னர் ஆன கேரளா அணிக்கு ரூ.3 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்:

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில்,இப்போட்டியைக் காண ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.அதன்படி,கேரள அணியின் ரசிகர்கள் கோவாவில் தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களின் செயலைக் காண ஏராளமான எண்ணிக்கையில் குவிந்தனர்.முதல்முறையாக பைனலுக்கு வந்த ஹைதராபாத் எஃப்சிக்கும் ரசிகர்களின் கூட்டம் பெருமளவில் இருந்தது.இதனால்,இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் முன்னதாக சிறிது நேரத்தில் விற்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்