ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் 10 அணிகளுக்கு இடையிலான 6-வது சீசன் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்றைய தினம் ஆட்டத்தில் ஐதராபாத்தில் இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் கொல்கத்தா அணியின் ராய் கிருஷ்ணா 15-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டுவந்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலடியாக ஐதராபாத் வீரர் போபோ 39-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமனிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை பெற்றது. பின்னர் இரண்டாவது பாதியில், ஐதராபாத் அணி வீரர் போபோ 85-வது நிமிடத்தில் மற்றோரு கோலை அடித்தார். இதனால் ஐதராபாத் அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது.
ஆனால், கடைசி கட்டத்தில் ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் ராய் கிருஷ்ணா மற்றோரு கோலை அதிரடியாக அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார். இறுதியில், ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என டிராவில் முடிந்தது. இதன்மூலம், கொல்கத்தா அணி விளையாடிய 9 போட்டிகளில் 4 வெற்றி, 3 டிரா மற்றும் 2 தோல்வி என 15 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது என குறிப்பிடத்தக்கது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…