ஐஎஸ்எல் கால்பந்து: ‘டிராவில்’ முடிந்தது கொல்கத்தா, ஐதராபாத் அணிகளுக்கிடையான போட்டி.!

Default Image
  • ஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கொல்கத்தா,  ஐதராபாத்துடனான ஆட்டம் நேற்று சமநிலையில் முடிந்தது.
  • ஐதராபாத் அணி வீரர் போபோ 2 கோலும், கொல்கத்தா சார்பாக, ராய் கிருஷ்ணா 2 கோலும், அதிரடி அடித்த போட்டியை சமம் செய்தனர்.

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் 10 அணிகளுக்கு இடையிலான 6-வது சீசன் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்றைய தினம் ஆட்டத்தில் ஐதராபாத்தில் இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் கொல்கத்தா அணியின் ராய் கிருஷ்ணா 15-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டுவந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலடியாக ஐதராபாத் வீரர் போபோ 39-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமனிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை பெற்றது. பின்னர் இரண்டாவது பாதியில், ஐதராபாத் அணி வீரர் போபோ 85-வது நிமிடத்தில் மற்றோரு கோலை அடித்தார். இதனால் ஐதராபாத் அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது.

ஆனால், கடைசி கட்டத்தில் ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் ராய் கிருஷ்ணா மற்றோரு கோலை அதிரடியாக அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார். இறுதியில், ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என டிராவில் முடிந்தது. இதன்மூலம், கொல்கத்தா அணி விளையாடிய 9 போட்டிகளில் 4 வெற்றி, 3 டிரா மற்றும் 2 தோல்வி என 15 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது என குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
Saif Hassan
seeman with prabhakaran
Bgg boss season8
Kho Kho Worldcup 2025 champions - India mens team and India Women team
TVK Leader Vijay vist Parandur
Morocco stray dogs shootout