ISL 2020-21: இன்று தொடங்குகிறது ஐஎஸ்எல் கால்பந்து லீக்.. தீவிர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
ஐஎஸ்எல் கால்பந்து லீக் இன்று தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் ஏடிகே மோகன் பகான் – கேரளா பிளாஸ்டா்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐஎஸ்எல் கால்பந்து தொடர்:
இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக பெரிதாக நடப்பது, ஐஎஸ்எல் கால்பந்து தொடர். 2020 – 2021 ஆம் ஆண்டு நடைபெறும் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர், இன்று கோவாவில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஏடிகே மோகன் பகான் – கேரளா பிளாஸ்டா்ஸ் அணிகள் மோதுகின்றன. கொரோனா பரவல் காரணமாக கோவாவில் உள்ள ஜவாஹா்லால் நேரு மைதானம், பாம்போலிம்மில் உள்ள ஜிஎம்சி மைதானம், வாஸ்கோவில் உள்ள திலக் மைதானம் ஆகிய 3 இடங்களில் நடைபெறவுள்ளன.
ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு:
இந்தியாவில் கொரோனா அச்சம் காரணமாக இந்த போட்டிகளை மைதானத்தில் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்திலும் காணலாம். நடப்பாண்டில் 115 போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும், இம்முறை 11 அணிகள் விளையாடவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஜனவரி 11-ம் தேதி வரை நடைபெறும் போட்டிகளுக்கு மட்டுமே அட்டவணை வெளியானது.
11 அணிகள்:
இந்தாண்டு புதிதாக SC ஈஸ்ட பெங்கால் என ஒரு அணி கலந்துகொள்ளவுள்ளது. எப்.சி. கோவா, ஏ.டி.கே. மோகன் பகான், பெங்களூா் எப்.சி., ஜாம்ஷெட்பூா் எப்.சி., சென்னையின் எப்.சி., மும்பை சிட்டி எப்.சி., ஒடிஸா எப்.சி., நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி., கேரளா பிளாஸ்டா்ஸ், ஹைதராபாத் எப்.சி. என மொத்தம் 11 அணிகள் விளையாடவுள்ளது.
சென்னையின் எப்.சி.:
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் முன்னணி அணியாக இருப்பது, சென்னையின் எப்.சி. அணி 2015, 2017 என இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. சென்னை அணியில் தலைமை பயிற்சியாளரான கிரகோரி மாற்றப்பட்டு, அவருக்கு பதில் புதிதாக ஓவன் கோயல் நியமிக்கப்பட்ட நியமிக்கப்பட்டார். இதனால் அடுத்தடுத்து போட்டிகளில் வெற்றிபெற்று, கொல்கத்தா, கோவா, பெங்களூர் ஆகிய பெரிய அணிகளை லீக் தொடரில் ஓடவிட்டது. நடப்பாண்டில் சென்னை அணி, நவம்பர் 24, 29, டிசம்பர் 4, 9, 13, 19, 26, 29, ஜனவரி 4, 10 ஆகிய தேதிகளில் விளையாடவுள்ளதாக அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டியை காண ரசிகர்கள் தீவிரமடைந்துள்ளனர்.