முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி.! புதிய சாதனை படைத்த இஷாந்த் சர்மா , கிங் கோலி..!
- முதல் டெஸ்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது.
- இப்போட்டியில் கேப்டன் கோலி கங்குலி சாதனையையும் , இஷாந்த் சர்மா ஜாகீர் கான் சாதனையையும் தகர்த்துள்ளனர்.
இந்திய அணி நியூசிலாந்தில் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் விளையாடிய இரண்டு இன்னிங்சிலும் இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடியது.இதனால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் இந்திய அணியை சேர்ந்த கேப்டன் கோலி , இஷாந்த் சர்மா இருவரும் புதிய சாதனைகளைப் படைத்துள்ளனர்.
இஷாந்த் சர்மா இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 297 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் வெளிநாடுகளில் பயணம் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதிக விக்கெட் பறித்த இந்திய வீரர் என்ற இந்த பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ஜாகீர் கான் 119 விக்கெட் பறித்து முதலிடத்தில் இருந்தார்.
இஷாந்த் ஷர்மா இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திதன் மூலம் வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டியில் விளையாடி 122 பறித்து ஜாகீர் கான் சாதனையை முறியடித்து உள்ளார். மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி டெஸ்ட் போட்டிகளில் 7,212 ரன்கள் எடுத்து இந்திய அளவில் அதிக ரன் அடித்த 6-வது வீரராக இருந்தார்.
இப்போட்டியின் 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய கேப்டன் கோலி 11 ரன்கள் எடுத்தார். இதன் முலம் டெஸ்ட் போட்டிகளில் கோலி 7223ரன்கள் எடுத்து உள்ளார். இதனால் கோலி கங்குலி சாதனையை தகர்த்தார்.