ரியல் மாட்ரீட் அணியில் கிலியான் எம்பாப்பே ..?
பிரான்ஸ் நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனான கிலியான் எம்பாப்பே தற்போது யுஇஎப்ஏ (UEFA) கால்பந்து தொடரில் பிஎஸ்ஜி (PSG) கிளப்பிற்காக விளையாடி வருகிறார். தற்போது இந்த யுஇஎப்ஏ சீசன் முடிவடையும் போது வருகின்ற கோடை மாதத்தில் இவர் ரியல் மாட்ரிட் கிளப்பிற்கு செல்ல உள்ளார் என சுத்துவட்டாரங்களில் பேச்சு வார்த்தை அடிப்பட்டு வருகிறது. இவர் கடந்த 2017 ம் ஆண்டு மொனாக்கோ கிளப்பிலிருந்து, பாரிஸ் கிளப்பிற்கு (PSG) வந்தார்.
ஐந்து வருடங்கள் கொண்ட இந்த ஒப்பந்தம், கடந்த 2022ம் ஆண்டு முடிவடையும் நிலையில் இருந்த போது மேலும் அந்த ஒப்பந்தத்தை இன்னும் இரண்டு வருடங்களுக்கு நீடித்து (2024ம் ஆண்டு வரை) பாரிஸ் கிளப்பிற்காக மீண்டும் விளையாடி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டின் கோடை மாதத்தில் மேலும், ஒரு ஆண்டுக்கு பிஎஸ்ஜி கிளப்பிற்காக விளையாட எம்பாப்பேவிடம் கேட்ட போது அந்த ஒப்பந்தத்தை அவர் மறுத்துள்ளார்.
#INDvENG : சர்பராஸ் கானிடம் மன்னிப்பு கேட்ட ஜடேஜா ..! ஏன் தெரியுமா ..?
இந்நிலையில், 7 சீசன்களுக்கு பிறகு பிஎஸ்ஜி கிளப்பிற்காக 274 கோல்களுடன் ஆல் டைம் டாப் கோல் ஸ்கோரராக பிஎஸ்ஜி கிளப்பிற்காக இருந்து வருகிறார். மேலும், ரியல் மாட்ரிட் கிளப்பிற்காக விளையாடுவதே எம்பாப்பேவின் சிறு வயது கனவாக இருந்து வருகிறது. அதனால் வருகின்ற இந்த 2024ம் ஆண்டின் கோடை மாதத்தில் அவர் அதிகார பூர்வமாக ரியல் மாட்ரிட் கிளப்பிற்காக விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
க்ரிஸ்டியானோ ரொனால்டோ, செர்ஜியோ ராமோஸ், ராபர்டோ கார்லோஸ் போன்ற நட்சத்திர கால்பந்து வீரர்கள் விளையாடிய கிளப்பான ரியல் மாட்ரிட் கிளப்பிற்காக எம்பாப்பே விளையாட வேண்டும் என்று எம்பாப்பேவின் ரசிகர்களும், ரியல் மாட்ரிட் அணி ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். எதுவாக இருந்தாலும் வருகின்ற கோடை மாதத்தில் தான் அவர் எந்த கிளப்பிற்காக விளையாடுவார் என்பது குறித்து அதிகார பூர்வமாக தெரிய வரும்.