IND vs BAN : “இது டெஸ்டா இல்ல டி20ஆ?”! அதிரடியில் சாதனைப் படைத்த ஜெய்ஸ்வால்!
டெஸ்ட் போட்டி வரலாற்றில் இந்திய அணி பேட்டிங்கில் அதிவேகமாக 100 ரன்களை கடந்து புதிய சாதனைப் படைத்துள்ளது.
கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்கத்தையே டி20 போல் ஆரம்பித்த இளம் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் தற்போது அதிரடியாக விளையாடி சாதனை படைத்துள்ளார். அவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிவேக அரை சதத்தையும் பதிவு செய்துள்ளார். அதன்படி வெறும் 31 பந்துகளுக்கு அவர் தனது அரை சதத்தை கடந்தார்.
இது, வங்கதேச அணிக்கு எதிராக அதிவேக அரை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். மேலும், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதுவேக அரை சதத்தைக் கடந்த வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த சாதனையின் மூலம், கடந்த 2021 இல் இங்கிலாந்துக்கு எதிராக ஷர்துல் தாகூர் (31 பந்துக்கு அரை சதம்) அடித்த அதிவேக அரை சத சாதனையை சமன் செய்துள்ளார். மேலும், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக ஒரு அணி 100 ரன்களை கடந்த பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்து மேலும் ஒரு சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
இந்தியா அணி வெறும் 10.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டி சாதனைப் படைத்துள்ளது. இப்படி டி20 போல விரைவாக விளையாடுவதற்கு காரணம் என்னவென்றால் 2-வது டெஸ்ட் போட்டி 4-நாள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், முதல் இன்னிங்ஸ் நடைபெற்று வருகிறது.
இதனால், 1 நாள் மட்டுமே மீதம் இருப்பதால், முடிந்த அளவுக்கு விரைவாக வங்கதேச அணிக்கு ரன்களில் முன்னிலை கொடுத்து. அடுத்து வங்கதேச அணி களமிறங்கும் போது இன்னிங்ஸ் உடன் போட்டியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி இருந்து வருகிறது.
இதனால், வங்கதேச அணி முடிந்த அளவிற்கு இந்த போட்டியை ட்ரா செய்யவே முயற்சி செய்வார்கள். மேலும், இந்திய அணி படைத்த சாதனைக்கும், டெஸ்ட் போட்டியை டி20 போல விளையாடும் இந்தியாவின் இளம் வீரரான ஜெய்ஸ்வால் படைத்த இந்த சாதனைக்கும் இந்திய ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் தற்போது 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மேலும், இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்து, வங்கதேச அணியை விட 103 ரன்கள் பின்னிலைப் பெற்று விளையாடி வருகிறது.