ரோஹித் சர்மாவுக்கு பிறகு யார் கேப்டன்? கேள்வி எழுப்பிய இர்பான் பதான்!
2024ல் ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு புதிய கேப்டனை தேர்வு செய்யும் பொறுப்பை தேர்வு குழு கவனத்தில் வைத்து கொள்ளவேண்டும் என இர்பான் பதான் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து பேட்டியில் பேசிய இர்பான் பதான் ” 2024-ல் இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
எனவே இரண்டு அல்லது மூன்று கேப்டன்களை அணியில் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் ஒரு வீரருக்கு பிரச்சனை ஏற்பட்டாலும் மீதம் இருக்கும் 2 வீரர்களில் யாராவது ஒருவர் கேப்டனாக செயல்படுவார்கள். முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி கேப்டனாக இருந்த போது பல போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று இருக்கிறது.
ஜடேஜா வந்தாலும் அஸ்வின் இருக்கனும்! கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேச்சு!
விராட் கோலி கேப்டனாக இருந்தபோது வீரர்களுக்கு நல்ல உத்வேகம் கொடுத்து இருக்கிறார். அதைப்போல, ரோஹித் ஷர்மா பல போட்டிகளில் கேப்டனாக இருந்து வெற்றிபெற்று கொடுத்து இருக்கிறார். ரோஹித் சர்மாவும் அணியை அற்புதமாக சிறப்பாக செயல்பட வைத்தார்.நாங்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதனை பார்த்தோம்.
ஆனால் ரோஹித் சர்மாவுக்கு பிறகு அணிக்கு கேப்டனாக யார் இருக்கிறார்? இதனை கண்டிப்பாக யோசிக்கவேண்டும். 024 ஆம் ஆண்டில் இந்திய அணி ஒரு நல்ல வேகப்பந்து வீச்சைத் தயார் செய்ய வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் கூறுகிறேன். தென்னாப்பிரிக்காவில் என்ன நடந்தது என்பதைப் பார்த்தோம். வேகப்பந்து வீச்சாளர்களுக்கான சிறந்த தேர்வுகளை தேர்வுக்குழு உருவாக்கவேண்டும் .
ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் நம்மளுடைய நிலைமை என்ன ஆவது? ஷமி இல்லாமல் நாம் கஷ்ட்டபடுவது சொல்லித்தான் தெரியவேண்டும் என்று இல்லை. எனவே, இது போன்ற வீரர்கள் இல்லாத சூழலில் எந்த வீரர்கள் மாற்றுவீரர்களாக இருப்பார்கள் என்பதனை சரியாக தேர்வு செய்யவேண்டும்” எனவும் இர்பான் பதான் கூறியுள்ளார்.