இரானி கோப்பை : சாம்பியனான மும்பை அணி! ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவித்த கிரிக்கெட் சங்கம்!
நடைபெற்று வந்த இரானி கோப்பை தொடரை கைப்பற்றி மும்பை அணி 27 வருடங்களுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
லக்னோ : ரெஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான இந்திய உள்ளூர் கோப்பை தொடரான இரானி கோப்பை தொடரின் டெஸ்ட் போட்டியானது லக்னோவில் நடைபெற்று வந்தது. இந்த போட்டி டிராவானதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் மும்பை அணி இந்த போட்டியை வெற்றி பெற்றுள்ளது.
இதனால், 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் வெற்றி பெற்ற இந்த மும்பை அணிக்கு, ரூ.1 கோடி பரிசுத்தொகையை அறிவித்து மும்பை வீரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது மும்பை கிரிக்கெட் சங்கம். நடைபெற்ற இந்த போட்டி கடந்த அக்-1ம் தேதி தொடங்கியது.
ஒரே ஒரு டெஸ்ட் போட்டியைக் கொண்ட இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃபி இந்தியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், முதலில் பேட்டிங் செய்த மும்பை தனது முதல் இன்னிங்சில் 537 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக சர்பராஸ் கான் 222 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதைத் தொடர்ந்து, ரெஸ்ட் ஆஃப் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்க்கு விளையாட பேட்டிங் களமிறங்கியது. அதன்படி, அவர்களது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து 121 ரன்கள் மும்பை அணி முன்னிலையில் இருந்தது.
அதன்பின், தனது 2வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி மிகச்சிறப்பாகவே பேட்டிங் விளையாடி தங்களது 5வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டியானது டிராவில் முடிவடைந்தது.இதனால், முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்ததன் காரணமாக மும்பை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
இதனால், 27 வருடங்களுக்கு பிறகு மும்பை அணி இந்த இரானி கோப்பையை வென்று அசத்தியது. மேலும், முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படி இருக்கையில், 27 ஆண்டுக்கு பிறகு இரானி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்த மும்பை அணியை ஊக்குவிக்கும் விதமாக மும்பை கிரிக்கெட் சங்கம் ரூ.1 கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.