இரானி கோப்பை : ‘எல்லாம் என் தம்பிக்காக’.. குடும்பத்திற்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றிய சர்ஃபரஸ் கான் !

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான இரானி கோப்பையில் இந்திய வீரரான சர்ஃபரஸ் கான் இரட்டை சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.

Sarfraz Khan

லக்னோ : நடைபெற்று வரும் இரானி கோப்பை டெஸ்ட் போட்டியில் மும்பை அணியும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியும் மோதி வருகிறது. இந்தப் போட்டியில் அஜின்க்யா ரகானே தலைமையிலான மும்பை அணியில் இடம் பெற்றிருந்த சர்ஃபரஸ் கான், மும்பை அணியில் முதல் இன்னிங்ஸ்க்கு பேட்டிங் செய்த போது தனி ஒருவனாக நின்று 222* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடி அசத்தியிருந்தார்.

தொடக்கத்தில் பேட்டிங் சற்று தடுமாறிய விளையாடிய மும்பை அணி இவரது விளையாட்டால் அந்த இன்னிங்ஸில் 537 ரன்களை குவித்தது. அதிலும் ஆட்டமிழக்காமல் விளையாடிய இவரது இந்த இரட்டை சத விளையாட்டு, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் இவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இப்படி இருக்கையில், சமீபத்தில் இவரது தம்பியான முஷீர் கான் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவர் இந்த இரட்டை சதம் அடித்த பிறகு, விளையாடிய தருணம் குறித்து அன்றைய நாள் முடிவில் பேசி இருந்தார்.

அதில், இந்த இரட்டை சாதத்தில் ஒரு ‘100’ஐ என் தம்பிக்கு சமர்ப்பிக்கிறேன், என்று கூறியிருக்கிறார். அன்றைய நாள் ஆட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த சர்ஃபரஸ் கான் பேசிய போது, “நான் அதிரடியாகவே ஆடத் தெரிந்தவன். நான் என் ஆட்டத்தின் மூலன் என் அணிக்கு நல்லது செய்திருக்கிறேன் என நினைக்கிறன்.

என் அணி மும்பைக்கும் நான் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டி இருந்தது.” அதைத்தொடர்ந்து அவரது தம்பி முஷீர் கானை பற்றி விசாரித்த போது மேற்கொண்டு பேசிய அவர், “நான் அவருடன் பேசினேன். அவர் நன்றாக இருக்கிறார். ஆனால் அவர் குணமடைய 2 அல்லது 3 மாதங்கள் ஆகும்.

இது எனக்கு ஒரு உணர்ச்சிமிக்க வாரம். நான் களத்தில் செட் ஆகிவிட்டால் 200 ரன்கள் அடிப்பேன் என என் குடும்பத்திடம் சத்தியம் செய்தேன். அதனைத் தற்போது நிறைவேற்றி இருக்கிறேன். நான் அடித்த இரட்டை சதத்தில் ஒரு சதம் எனக்கு, ஒரு சதம் என் தம்பிக்கு”, என சர்ஃபரஸ் கான் கூறி இருந்தார்.

இவர் பேசியது, கிரிக்கெட் ரசிகர்களிடேயே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இரட்டை சதம் விளாசிய அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, அவரது தம்பி விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வோம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - TN Rain
Kamala Harris - US Election
06.11.2024 Power Cut Details
VCK Leader Thirumavalavan - Tamilnadu CM MK Stalin
yellow alert rain
VCK Leader Thirumavalavan - TVK Leader Vijay
Sunil Gavaskar