#IPL2022 : பஞ்சாப் அணிக்கு 154 ரன்கள் இலக்கு…!
20 ஓவர் முடிவில் லக்னோ அணி, 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. புனேவில் இன்று நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் , பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
லக்னோ அணியின் சார்பில் விளையாடிய டிகாக் 46 ரன்களும், ஹூடா 34 ரன்களும் எடுத்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.பஞ்சாப் அணியின் சார்பாக விளையாடிய ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த நிலையில், 20 ஓவர் முடிவில் லக்னோ அணி, 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளனர்.