IPL2022 : டாஸ் வென்ற மும்பை அணி..! வெற்றி கிட்டுமா..?

Default Image

இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று, பந்து வீச்சுக்கு தேர்வாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ அணிகள் மோதுகின்றன. அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று, பந்து வீச்சுக்கு தேர்வாகியுள்ளது. தொடர் தோல்வியை சந்தித்து வரும் மும்பை இந்தியாஸ் அணி, இந்த முறையாவது வெற்றி பெறுமா? என்ற  ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மும்பை அணி : 

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், ஹிருத்திக் ஷோக்கீன், ஜெய்தேவ் உனட்கட், டேனியல் சாம்ஸ், ரிலே மெரிடித், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் விளையாடுகின்றனர்.

லக்னோ அணி :

கேஎல் ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (வி.கே.), மணீஷ் பாண்டே, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோனிஸ், ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, மொஹ்சின் கான், ரவி பிஷ்னோய் ஆகியோர் விளையாடுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்