ஏலத்தில் எடுக்காத ஐபிஎல் அணிகள்! இங்கிலாந்தை வெளுத்து வாங்கிய கேன் வில்லியம்சன்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 7 ரன்களில் சதத்தை நழுவவிட்டார்.

Kane Williamson

இங்கிலாந்து : ‘காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்’ என்ற வரிகளுக்கு ஏற்ப நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது வில்லியம்சனுக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.

காயம் ஏற்பட்ட காரணத்தால் அவர் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை அவர் தவறவிட்டார். காயத்தில் இருந்து மீண்டும் எப்படி அவரால் விளையாட முடியும்? அவர் ஃபார்மில் கூட இல்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த விமர்சனங்கள் இன்னுமே அதிகமாகும் அளவில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் கூட  கேன் வில்லியம்சனை எந்த அணியும் எடுக்க முன் வரவில்லை.

இதனால், கேன் வில்லியம்சன் ரசிகர்கள் சோகத்தில் இருந்தார்கள். ஆனால், இந்த விமர்சனங்களுக்கு நம்மளுடைய வாயால் நாம் பதிலடி கொடுக்க கூடாது நம்மளுடைய பேட்டிங் மூலம் விமர்சனங்களை தகர்த்தெறிவோம் என்கிற எண்ணத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸின் போது அணியில் தொடர்ச்சியாக விக்கெட் விழுந்து கொண்டிருந்த சூழலில் நான் இருக்கிறேன் என நிதானம் கலந்த அதிரடியுடன் கேன் வில்லியம்சன் விளையாடினார்.

அரை சதம் விளாசி சதம் விளாசும் நோக்கத்தில் விளையாடி கொண்டிருந்த அவர் துரதிஷ்டவசமாக 93 ரன்கள் (197 பந்துகள்) விளாசி ஆட்டமிழந்தார். சதம் வேண்டுமானால் மிஸ் ஆகி இருக்கலாம் ஆனால், தன்னுடைய இந்த அதிரடியாக ஆட்டம் மூலம் அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு அவர் தக்க பதிலடி கொடுத்தார்.

அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தின் போது கூட இவரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. ஆனால், இந்த ஆட்டத்தின் மூலம் கேன் வில்லியம்சன் அதற்கு மறைமுகமாக பதில் சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்