பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர், பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பெங்களூரில் வைத்து இந்த ஏலம் நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர், பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பெங்களூரில் வைத்து இந்த ஏலம் நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த ஏலம் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
இதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், கொரோனா பரவலானது அதிகரிக்காமல் இருந்தால், இந்தியாவில் வைத்து நடைபெறும் என்றும், அப்படி அதிகரிக்கும் பட்சத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஏலம் நடைபெற வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், புதிய அணிகளான லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகளும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளது. இந்த மெகா ஏலத்தில், 1,000 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதுகின்றனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும்…
சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட…
டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. டெல்லியில் உள்ள…
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…