ஐபிஎல் 2025 : சூர்யகுமார் இங்க அவரு அங்க! கொல்கத்தா – மும்பை போடும் மாஸ்டர் பிளான்?
மும்பை அணி சூர்யகுமார் யாதவையும், கொல்கத்தா அணி ஸ்ரேயாஸ் ஐயரை விடுவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிள்ளது.
சென்னை : ஐபிஎல் 2025 போட்டிகள் எப்போது தொடங்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், போட்டிக்கு முன்னதாக அதாவது இந்த ஆண்டு இறுதியில் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் அணிகள் 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்கவுள்ளனர். எனவே, எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இன்னும் ஏலம் நடைபெற சில மாதங்கள் இருந்தாலும் கூட, அவ்வபோது அணிகள் விடுவிக்கவுள்ள வீரர்கள் பற்றியும், ஏலத்தில் எடுக்கவுள்ள வீரர்கள் பற்றிய தகவலும் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், கொல்கத்தா அணி சூர்யகுமார் யாதவை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாம்.
சூர்யகுமார் யாதவ் மும்பை அணிக்கு விளையாடியதற்கு முன்பு கொல்கத்தா அணிக்காக தான் விளையாடி இருக்கிறார். அதுமட்டுமின்றி, இந்திய அணிக்காக விளையாடிய சில போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தவும் செய்திருக்கிறார். எனவே, அவரை இந்த முறை கொல்கத்தா அணியை வழிநடத்தினால் சரியாக இருக்கும் என கொல்கத்தா அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாம்.
எனவே, மும்பை அணி அவரை விடுவித்தால் நிச்சயமாக கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைப்போல, கொல்கத்தா அணி ஸ்ரேயாஸ் ஐயரை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாம். அவரை விடுவித்தால் அவரை ஏலத்தில் எடுக்க மும்பை அணி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரு பக்கம் இப்படி கேள்விகள் எழுந்தாலும் மற்றோரு பக்கம் இது சாத்தியமா? என்ற கேள்விகளும் எழும்பி இருக்கிறது. ஏனென்றால், மும்பை அணிக்கு தூணாக இருக்கும் பேட்ஸ்மேன்களில் சூர்யகுமார் யாதவ் ஒருவர். அதைப்போல, ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா அணியை சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார். அவருடைய கேப்டன் சியில் தான் கொல்கத்தா கோப்பையை வென்றது.
எனவே, இந்த சுழலில் இரண்டு வீரர்களை இரண்டு அணி நிர்வாகம் எப்படி விடுவிக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உண்மையில், இரண்டு வீரர்களையும் நிர்வாகம் இருவரையும் விடுவிக்கவுள்ளார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.