ஐபிஎல் 2025: அடுத்த ஆண்டு ஆர்சிபி கேப்டனா? கே.எல்.ராகுல் சொன்ன பதில்?
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணிக்காக விளையாடவுள்ளதாக பரவும் தகவல் பற்றி கே.எல்.ராகுல் ஒரே வார்த்தையில் பதில் சொல்லியிருக்கிறார்.
சென்னை : ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை லக்னோ அணி விடுவிக்கவுள்ளதாகவும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி அவரை எடுக்கவுள்ளதாகவும் தீயான தகவல் ஒன்று பரவி கொண்டு இருக்கிறது.
அதற்கு, முக்கியமான காரணமே, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுலை அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா திட்டியது தான். திட்டிய பிறகு அந்த விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், அதற்கு அடுத்ததாக அணியின் உரிமையாளர் கே.எல்.ராகுலை வீட்டிற்கு அழைத்து விருந்துகொடுத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இருந்தாலும், அவரை அடுத்த ஆண்டு லக்னோ அணி விடுவிக்கவுள்ளதாக தான் தகவல்கள் பரவி கொண்டு இருக்கிறது. இது ஒரு புறம் இருந்தாலும், ரசிகர்களுடைய எதிர்பார்ப்பு கே.எல்.ராகுல் பெங்களூர் அணிக்காக தான் விளையாடவேண்டும் என கூறி வருகிறார்கள். குறிப்பாக, இந்தியா A மற்றும் இந்தியா B அணிகளுக்கு இடையேயான துலிப் ட்ராபி போட்டியில் ரசிகர்கள் “ஆர்.சி.பி கேப்டன் கே.எல்.ராகுல்” என கோஷமிட்ட வீடியோ வைரலாகி இருந்தது.
ரசிகர்களே கே.எல்.ராகுல் தான் அடுத்த ஆண்டு பெங்களூர் அணியின் கேப்டனாக விளையாடவேண்டும் என ஆசைப்பட்டு அவர் அணிக்கு வரவேண்டும் என வேண்டுகோள் வைத்து வரும் நிலையில், இப்படியான தகவல்களுக்கு கே.எல்.ராகுல் பதில் ஒன்றையும் அளித்துள்ளார். சமீபத்தில் கே.எல்.ராகுலை அவருடைய தீவீர ரசிகர் ஒருவர் சந்தித்தார்.
அந்த சந்திப்பின் போது, நீங்கள் அடுத்த ஆண்டு பெங்களூர் அணிக்கு கேப்டனாக விளையாடப்போகிறீர்கள் என்ற தகவல் பரவி வருகிறது. அது பற்றி நீங்கள் சொல்வது என்ன என கேட்டார். அதற்கு பதில் கூறிய கே.எல்.ராகுல் “பார்ப்போம்” என கூறியுள்ளார். அவருடைய பதிலை பார்த்த ரசிகர்கள் இல்லை என்றால் அவர் இல்லை என சொல்லியிருக்கலாம் அவருக்கு ஆசை இருப்பதால் தான் சூசகமாக பதில் கூறியுள்ளார் என கூறி வருகிறார்கள்.