ஐபிஎல் 2025 : ரோஹித் இல்லை .. இந்த 5 பேர் தான்! மும்பை அணி தக்கவைக்க போகும் வீரர்கள்!
சூர்யகுமார் யாதவ், நேஹால் வதேரா, நமன் திர், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை மும்பை அணி தக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. ஏலம் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் சமீபத்தில் நடைபெற உள்ள ஏலத்துக்கான விதிமுறைகள் பிசிசிஐ-யால் அறிவிக்கப்பட்டது.
இதனால், அந்த விதிகள் வெளியானது முதல் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை எடுக்கப்போகிறார்கள் எனத் தகவல்கள் பரவி ஐபிஎல் தொடருக்கு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Read More – ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக 6 வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ளமுடியும். அதாவது, ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக வீரர்களை நேரடியாகவோ அல்லது ஏலம் நடைபெறும்போதே ரைட் டூ மேட்ச் (RTM) என்ற அட்டையைப் பயன்படுத்தித் தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை விதிக்கப்பட்டிருந்ததாக பிசிசிஐ அறிவித்திருந்தது.
எனவே, ஒவ்வொரு அணிகளும் 6 வீரர்களைத் தக்க வைத்துக்கொள்ளத் திட்டமிட்டு அந்த வீரர்கள் யாரெல்லாம் என யோசித்து வருகிறது. இந்த சூழலில், மும்பை இந்தியன் அணி 5 வீரர்களைத் தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் யாரெல்லாம் என்பது பற்றிய விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஜஸ்பிரித் பும்ரா
சர்வதேச கிரிக்கெட்டில் முக்கிய பந்துவீச்சாளராக இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா நீண்ட ஆண்டுகளாக மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். அணியின் பந்துவீச்சை, பொறுத்தவரை முக்கிய தூணாகவும் இருந்து வருகிறார். இதுவரை, பும்ரா மும்பை அணிக்காக 133 போட்டிகளில் விளையாடி 165 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எனவே, இப்படியான ஒரு பந்துவீச்சாளரை மும்பை விடுவிக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவே, தக்க வைத்துக்கொள்ளத் தான் முடிவு செய்துள்ளது.
ஹர்திக் பாண்டியா
தற்போதைய மும்பை அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியா ஒரு சிறந்த ஆல் ரவுண்டர். அவர் இதற்கு முன்னதாக குஜராத் அணிக்காக விளையாடி கேப்டனாக செயல்பட்டு ஒரு கோப்பையையும் வாங்கி கொடுத்துள்ளார். எனவே, அவரையும் மும்பை அணி விடுவிக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவை பொறுத்தவரையில் டி20 போட்டிகள் என்று வந்துவிட்டாலே அவருடைய பேட்டிங் வேற லெவலில் இருக்கும். அதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இவரும் நீண்ட ஆண்டுகளாக மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். எனவே, மும்பை அணியின் மிடில் பேட்டிங்கிற்கு தூணாக இருக்கும்சூர்யகுமார் யாதவை மும்பை அணி தக்க வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதுவரை 150 இன்னிங்ஸ் விளையாடியுள்ள அவர் 3,594 ரன்கள் எடுத்துள்ளார்.
நேஹால் வதேரா, நமன் திர்
இவர்கள் இருவரும் வளர்ந்து வரும் இளம் வீரர்களாக இருக்கிறார்கள். இன்னும் இவர்கள் சர்வதேச போட்டிகளில் கூட விளையாடவில்லை. ஐபிஎல் போட்டிகளிலும் இவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, நடந்து முடிந்த சீசனில் கூட நன்றாக விளையாடி இருந்தார்கள். இவர்களை தக்க வைக்க அது ஒரு காரணமாக இருப்பது போல மற்றோரு காரணம் மும்பை அணி எப்போதும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை தொடர்ச்சியாக வைத்துள்ளார்கள். எனவே, இதன் காரணமாக இருவரையும் இந்த ஆண்டு தக்க வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரோஹித் இல்லையா?
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா இதுவரை அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்து இருக்கிறார். நடந்து முடிந்த சீசனில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்ட நிலையில், வீரராக ரோஹித் விளையாடி வந்தார். இதனால் என்னவோ அணிக்குள் சண்டைகள் நடப்பதாகவும் அரசல், புரசலாக பேசப்பட்டது.
இந்த சூழலில், தெளிவு தெரியாத ஒரு கேள்வியாக இருக்கும் விஷயங்களில் ஒன்று என்னவென்றால், அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை அணியில் ரோஹித் இருப்பாரா? என்பது தான்.
ஏனெனில், ரோஹித் சர்மா அணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே ஒரு தகவல் பரவி கொண்டு இருந்தது. எனவே, அவர் அப்படி விலகினால் அவருக்கு பதில் வேறொரு வீரரை எடுக்க மும்பை திட்டமிட்டுள்ளதாகவும், அப்படி அவர் விலகவில்லையானால் மும்பை அணியிலே தொடருவார் எனவும் பேசப்பட்டு வருகிறது.