ஐபிஎல் 2025 : சச்சின் மகன்னா சும்மாவா? இப்போவே ஏலத்தில் குறி வைத்த 3 அணிகள்!
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கரை மூன்று அணிகள் ஏலத்தில் எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள மெகா ஏலத்தில் அவரை அணி நிர்வாகம் விடுவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைப்போலவே, அவரை 3 பெரிய அணிகள் ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் 2025 ஆண்டுக்கான மெகா, ஏலத்திற்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது. அதற்கு முன்னதாக அணிகள் நிர்வாகம் யாரையெல்லாம் ஏலத்தில் எடுக்கலாம் என்கிற அளவுக்கு யோசித்து அதற்கான வேலைகளை தொடங்கியுள்ளனர். பெரிதளவில் அணிகள் நிர்வாகம் இந்த முறை இளமையான வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக தான் இளம் வீரராக வளர்த்துக்கொண்டு இருக்கும் அர்ஜுன் டெண்டுல்கரை 3 அணிகள், எடுக்க குறிவைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மும்பை அணிக்காக விளையாடிய அவர் பெரிய அளவில் தன்னுடைய பந்துவீச்சினால் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே கூறலாம். இருப்பினும், சமீபத்தில் அவர் அனைவருடைய கவனத்தையும் இருந்துள்ளார்.
அதன்படி, அர்ஜுன் உள்ளூர் போட்டியில் விளையாடி வருகிறார். கேஎஸ்சிஏ இன்விடேஷனல் போட்டியில் மாநில அணிகளான கர்நாடகா மற்றும் கோவா விளையாடின. இதில், அவர் விளையாடிய விதம் தான் அவரை 3 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் குறிவைக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெரிகிறது. அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அர்ஜுன் அசத்தியுள்ளார்.
அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இவரை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் நம்மளுடைய அணிக்கு விளையாடினாள் சரியாக இருக்கும் என குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆகிய மூன்று அணிகள் அவரை கூறி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் ஒரு புறம் இருக்க மற்றோரு பக்கம். அடுத்த ஆண்டு அவரை அணியில் இருந்து மும்பை அணி விடுவிக்கிறதா? அல்லது தக்க வைத்து கொள்ளுமா என்பது எல்லாம் மெகா ஏலம் நடைபெறும் போது மட்டும் தான் தெரியவரும்.