ஐபிஎல் 2025 : விளையாடுவது குறித்து முடிவெடுக்காத தோனி? சிஇஓ போட்டுடைத்த உண்மை!
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவது குறித்த முடிவை தோனி வரும் 31-ஆம் தேதிக்குள் சொல்வதாக சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
சென்னை : தோனி ரசிகர்களுக்கு எப்போதும் பதட்டமாக இருக்கும் விஷயம் என்றால் அவர் எப்போது ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிப்பார் என்பது தான். எனவே, ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பு தோனி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா? என்பது தான் மிகப்பெரிய கேள்வியாகவும் இருந்து வருகிறது.
அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுவாரா அல்லது ஓய்வு பெறப்போகிறாரா? என ரசிகர்கள் கவலையுடன் சேர்ந்த எதிர்பார்ப்புகளில் காத்திருக்கிறார்கள். இந்த சூழலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ (CEO)காசி விஸ்வநாதன் தோனி அடுத்த ஆண்டு விளையாடுவது குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார்.
இது குறித்து சென்னையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர் ” வருடம் வருடம் ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடவேண்டும் என்பது ரசிகர்களைப் போலவே எங்களுக்கும் ரொம்ப ஆசை இருக்கிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடுவாரா என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. அவர் தான் இது குறித்து முடிவெடுத்து வைத்திருப்பார்.
அடுத்த ஆண்டு விளையாடுவது குறித்து தோனி இன்னும் எங்களிடம் பேசவில்லை. வருகின்ற 31-ஆம் தேதி என்னவென்று தன்னுடைய முடிவைச் சொல்வதாக எங்களிடம் தெரிவித்து இருக்கிறார்” எனவும் சிஇஓ காசி விஸ்வநாதன் பேசியுள்ளார்.
தோனி இன்னும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் விளையாடுவேனா விளையாடமாட்டேனா என்பது பற்றிய முடிவை இன்னும் எடுக்காமல் உள்ளதால் ஒரு வேலை அவர் இந்த சீசனுடன் ஓய்வு பெறுவாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அவருடைய முடிவு குறித்த விவரம் வரும் 31-ஆம் தேதி தெரிய வரும். அதில், பார்த்து அவர் விளையாடுவாரா அல்லது ஓய்வுபெற முடிவெடுத்துள்ளார் என்பதைத் தெரிந்துகொள்வோம்.