#IPL 2022 : நாளைய ஐபிஎல் போட்டி வேறு இடத்திற்கு மாற்றம்..!
கொரோனா காரணமாக டெல்லி – பஞ்சாப் அணிகள் இடையே நடைபெறவிருந்த போட்டியானது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
முதன்முதலாக ஐபிஎல் போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உடற்பயிற்சியாளர் பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அணியில் உள்ள மற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.
இந்த நிலையில், நாளை டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டத்தில் விளையாட டெல்லி அணி நேற்று புனே புறப்படுவதாக இருந்தது. பயணத்துக்கு முன்னதாக நடத்தப்பட்ட ரேப்பிட் சோதனையில் வெளிநாட்டு வீரர் ஒருவரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, கொரோனா காரணமாக டெல்லி – பஞ்சாப் அணிகள் இடையே நடைபெறவிருந்த போட்டியானது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, புனேவில் நடைபெறவிருந்த போட்டி, மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது.