IPL 2022 : 6-வது முறையாக மும்பை அணி படுதோல்வி…!
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ள 6 போட்டிகளிலும் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய 26-வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடினர். மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தி பிற்பகல் தொடங்கிய இப்போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து, மும்பை அணிக்கு 200 ரன்களை வெற்றி இலக்காக லக்னோ அணி நிர்ணயம் செய்தது. இதனை தொடர்ந்து மும்பை அணி சார்பாக களமிறங்கிய அவ்வணியின் கேப்டன் ரோகித் சர்மா 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷண் 13 ரன்னிலும், பிரெவிஸ் 31 ரன்னிலும், திலக் வர்மா ஜோடி 26 ரன்னில் வெளியேறினார்.
இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ள 6 போட்டிகளிலும் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது. மும்பை அணியை லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே சேர்த்தது.