IPL 2022 : பிரபல உடற்பயிற்சியாளரும் கொரோனா தொற்று உறுதி…!
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உடற்பயிற்சியாளர் பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உடற்பயிற்சியாளர் பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரை தனிமைப்படுத்தி உள்ள நிலையில், அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் உடற்பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த அணியின் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகளில் முதல் முறையாக கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது, வீரர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஐபிஎல் போட்டியானது பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, தொற்று குறைந்த பின், ஆமீரகத்தில் மீதி போட்டிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆண்டும் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.