ஐபிஎல்2020 : போடு முதல் மேட்சே வெறித்தனம்.! போட்டி விபரங்களை அறிவித்தது விவோ.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • ஐபிஎல் 2020-ம் ஆண்டுக்கான 13-வது சீசன் வரும் மார்ச் 29-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நிலையில் தற்போது மோதும் அணிகள் குறித்த அட்டவணையை விவோ நிறுவனம் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது சீசன் வரும் மார்ச் 29-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த ஆண்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ்,​ கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு என 8 டீம்கள் விளையாட உள்ளது. நடப்பு ஆண்டு உள்ளுர் கிரிக்கெட் தொடர் தொடங்க இருப்பதால், சில வீரர்கள் பயிற்சியை ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் இந்த ஆண்டுக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஸ்பான்சர் விவோ நிறுவனம், தற்போது இந்த ஆண்டுக்கான போட்டி விபரத்தை வெளியிட்டுள்ளது. அதில் தேதி, இடம், நேரம், மைதானம், மோதும் அணிகள் விவரங்களை அறிவித்துள்ளது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் அவர்களது பிடித்தமான அணிகளை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் முதல் போட்டியே மும்பை ஸ்டேடியத்தில் சீஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் என இரண்டு சாம்பியன் அணிகள் மோதுகின்றனர். கடந்த ஆண்டு இரண்டு அணிகள் இறுதி போட்டியில் மோதி 4-வது முறையாக மும்பை கோப்பையை கைப்பற்றியது. அதனால் நடக்க இருக்கும் முதல் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!

6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!

கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…

4 minutes ago

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

1 hour ago

LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…

1 hour ago

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

2 hours ago

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…

3 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு… மருத்துவமனை அறிக்கை.!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…

4 hours ago