ஐபிஎல்2020 : போடு முதல் மேட்சே வெறித்தனம்.! போட்டி விபரங்களை அறிவித்தது விவோ.!

- ஐபிஎல் 2020-ம் ஆண்டுக்கான 13-வது சீசன் வரும் மார்ச் 29-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நிலையில் தற்போது மோதும் அணிகள் குறித்த அட்டவணையை விவோ நிறுவனம் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது சீசன் வரும் மார்ச் 29-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த ஆண்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு என 8 டீம்கள் விளையாட உள்ளது. நடப்பு ஆண்டு உள்ளுர் கிரிக்கெட் தொடர் தொடங்க இருப்பதால், சில வீரர்கள் பயிற்சியை ஆரம்பித்துவிட்டனர்.
#IPL2020 schedule ❤???? pic.twitter.com/bOsEvypclR
— VIVO IPL 2020 (@IPLCricket) February 15, 2020
மேலும் இந்த ஆண்டுக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஸ்பான்சர் விவோ நிறுவனம், தற்போது இந்த ஆண்டுக்கான போட்டி விபரத்தை வெளியிட்டுள்ளது. அதில் தேதி, இடம், நேரம், மைதானம், மோதும் அணிகள் விவரங்களை அறிவித்துள்ளது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் அவர்களது பிடித்தமான அணிகளை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் முதல் போட்டியே மும்பை ஸ்டேடியத்தில் சீஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் என இரண்டு சாம்பியன் அணிகள் மோதுகின்றனர். கடந்த ஆண்டு இரண்டு அணிகள் இறுதி போட்டியில் மோதி 4-வது முறையாக மும்பை கோப்பையை கைப்பற்றியது. அதனால் நடக்க இருக்கும் முதல் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025