ENGvsWI: குறுக்கிட்ட மழை.. மூன்றாம் நாள் ஆட்டம் ரத்து!

இங்கிலாந்து-வெஸ்ட் இண்டிஸ் இடையே நடக்கும் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் போட்டியில் பெய்த மழை காரணமாக, மூன்றாம் நாள் ஆட்டம் ரத்தானது.
இங்கிலாந்து-வெஸ்ட் இண்டிஸ் இடையே 3 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றி பெற்றது.
அதன்பின் மாஞ்செஸ்டரில் நடைபெற்று வரும் இரண்டாம் போட்டியில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அதன்படி, முதல் இன்னிக்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 469 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
அதில் அதிகபட்சமாக, பென் ஸ்டோக்ஸ் 176 ரன்களும், டோமினிக் சிப்ளே 120 ரன்கள் எடுத்து, அதிரடியாக சதம் விளாசினார்கள். அதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கவிருந்த நிலையில், அங்கு மழை குறுக்கிட்ட காரணமாக, ஒரு பந்து கூட வீசாமல் ஆட்டம் ரத்தானது. மேற்கு இந்திய அணியில் அல்சாரி ஜோசப் 14 ரன்களுடனும், கிரெய்க் பிராத்வைட் 6 ரன்கள் எடுத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025