இரவு முழுவதும் தீவிர பயிற்சி ..! வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி !!

Published by
அகில் R

பாரிஸ் : உலக நாடுகள் பங்கேற்று விளையாடி வரும் தொடரான ஒலிம்பிக் தொடரானது தற்போது பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் மகளீருக்கான 50 கி எடை பிரிவில் இந்திய அணியின் சார்பாக வினேஷ் போகத் கலந்து கொண்டு விளையாடி வந்தார்.

இவர் நேற்று 50 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்த போட்டியில் காலிறுதி சுற்றில் ஜப்பானை சேர்ந்த வீராங்கணையான யுய் சுசாகியையும், அடுத்து அரையிறுதியில் கியூபாவின் யுஸ்னிலிஸ் குஸ்மானையும் தோற்கடித்து இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார். இந்தியாவிற்கு இந்த ஒலிம்பிக்கில் இதுவரை 3 வெண்கல பதக்கம் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், இன்றைய நாள் தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் உறுதியாக கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.

ஆனால், இன்றைய நாளில் இறுதி போட்டியில் கலந்து கொள்வதற்கான உடற்தகுதி சோதனையில் 100 கிராம் அதிகம் உள்ளதன் காரணமாக ஒலிம்பிக் கமிட்டி அவரை தகுதி நீக்கம் செய்தது. இதனால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்த அமெரிக்க வீராங்கணை சாராவிற்கு தங்க பதக்கம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக பல கோடி இந்தியர்களின் பதக்க கனவும் நொறுங்கி இருக்கிறது. மேலும், இந்த இறுதி போட்டிக்காக தனது உடல் எடையை குறைப்பதற்காகவே நேற்று இரவு முழுவதும் விடாமல் உடற்பயிற்சிகள் செய்து 1.80 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்துள்ளார்.

தற்போது, நீர்சத்து குறைபாடு மற்றும் இரவு முழுவதும் விடாமல் பயிற்சி என  உடல் கோளாறு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் வினேஷ் போகத். தனது தனிப்பட்ட வாழ்க்கை முதல் மல்யுத்த போட்டிகளில் அவர் சந்தித்த அளவிற்கு துன்பங்கள் எந்த வீரர் மற்றும் வீராங்கனைகளும் சந்தித்திருப்பது சந்தேகம் தான்.

தற்போது, பல இன்னல்களை தாண்டி இறுதி போட்டியில் நுழைந்த போதும் கூட உடல் எடை கூடியதன் காரணமாக இறுதி கட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் வினேஷ் போகத். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இந்தியாவால் எந்த ஒரு மேல்முறையீடும் செய்ய முடியாதென்று தகவலும் வெளியாகி உள்ளது. இது கோடி கணக்கான இந்தியர்களின் இதயங்களையும் நொறுக்கி இருக்கிறது என்றே கூறலாம்.

Published by
அகில் R

Recent Posts

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

11 minutes ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

48 minutes ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

3 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

4 hours ago

மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…

5 hours ago

ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…

5 hours ago