இந்திய கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷாவிடம் தகராறில் ஈடுபட்டு அவரது காரை தாக்கியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் சப்னா கில் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த புதன்கிழமை அதிகாலையில் மும்பையில் ஒரு ஹோட்டலில் இந்திய கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷா மற்றும் அவரது நண்பர்கள் இருந்த போது, இன்ஸ்டாகிராம் பிரபலம் சப்னா கில் மற்றும் அவரது நண்பர் தாகூர், ப்ரித்வி ஷாவிடம் செல்பி கேட்டுள்ளனர். அப்போது இன்னும் அதிக செல்பிக்களை எடுத்ததால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
தகராறு : இதனை அறிந்த ஹோட்டல் மேலாளர் சப்னா கில் மற்றும் அவரது நண்பர்களை அங்கிருந்து வெளியேற்றி உள்ளார். ஆனால் அவர்கள் ஹோட்டலில் இருந்து வெளியேறாமல், கிழே கார் நிறுத்துமிடத்தில் கையில் மட்டைகளுடன் இருந்ததாக கூறப்படுகிறது.
கார் மீது தாக்குதல் : இதனை அடுத்து அங்கு பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து, ப்ரித்வி ஷா அங்கிருந்து வேறு காரில் சென்றுவிட்டார். ப்ரித்வி ஷா காரை அவரது நண்பர் ஒட்டி சென்றுள்ளார். இருந்தும் சப்னா கில் நண்பர்கள் காரை துரத்தி சென்று கண்ணாடியை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ப்ரித்வி ஷா நண்பர் ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பெண் பிரபலம் கைது : இந்த புகாரை அடுத்து சப்னா கில் மற்றும் அவரது நண்பர்களை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த விசாரணையில் சப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டு சப்னா கில் கைது செய்யப்பட்டார். மேலும் சப்னா கில் நண்பர்கள் ஏழு போரையும் ஓஷிவாரா காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…