இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணி டி 20 போட்டியில் விளையாடி வருகிறது. இன்று மும்பையில் நடைபெற்ற கடைசி போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா ,கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவருமே அதிரடி ஆட்டத்தால் அரை சதம் விளாசினார்.
135 ரன்கள் வரை ஒரு விக்கெட் இழக்காமல் விளையாடி வந்த போது ரோஹித் 71 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து களமிறங்கிய பண்ட் 2 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். பின்னர் கே.எல் ராகுல் ,கேப்டன் விராட் கோலி இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில்அதிரடியாக விளையாடிய கேப்டன் கோலி20 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதன் பின் ராகுல் சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 91 ரன்னில் வெளியேற இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 240 ரன்கள் குவித்தனர்.
இதில் அதிகபட்சமாக ராகுல் 91 ரன்கள் அடித்தார். பின்னர் 241 ரன்கள் என்ற இலக்குடன் களமிங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ஓவருக்குள் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது.
இதை தொடர்ந்து ஹெட்மயேர் ,கீரோன் பொல்லார்ட் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி சரிவில் இருந்த அணியை மீட்டு கொண்டு வந்தனர்.சிறப்பாக விளையாடி வந்த ஹெட்மயேர்அரைசதம் அடிக்காமல் விக்கெட்டை 41 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் அணியின் கேப்டன் கீரோன் பொல்லார்ட் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்தை சிஸேர்களாக பறக்கவிட்டார்.அதிரடியாக விலையாடிய பொல்லார்ட் புவனேஷ்குமார் வீசிய பந்தை சிக்ஸர் அடிக்க முயற்சி செய்த போது பவுண்டரி லைனில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இறங்கிய அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை இறுதியாக இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை பறிகொடுத்து 173 ரன்கள் எடுத்து 67 வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.இதனால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…