INDvsWI: மைதானத்தில் நாய் புகுந்ததால் போட்டி பாதிப்பு.! வைரல் வீடியோ.!

- போட்டியின் 25 -வது ஓவரின் முடிவில் மைதானத்திற்குள் நாய் புகுந்தது.இதனால் போட்டி சிறிது நேரம் நடைபெறவில்லை.
- பணியாளர்கள கையிலும் சிக்காமல் மைதானத்தை சுற்றி வந்தது.பின்னர் சிறிது நேரம் கழித்து மைதானத்தில் இருந்து நாய் சென்று விட்டது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது ஒருநாள் தொடர் தொடரில் விளையாடி வருகிறது. இன்று முதல் ஒரு நாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இதை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் , கே .எல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.கடைசி டி 20 போட்டியில் அடித்தது போல அடிப்பார்கள் என எதிர்பார்த்தனர். ஆனால் கே .எல் ராகுல் 15 , கோலி 4 மற்றும் ரோஹித் 36 ரன்களுடன் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர்.
#IndiavsWestIndies In comical scenes, a stray #dog has brought the first ODI between India and West Indies to a standstill after a mad dash onto the pitch after 26th over. #indvswestind #IndvsWI pic.twitter.com/zhr3MYl7V2
— Kamal Joshi (@KamalJoshi108) December 15, 2019
பின்னர் இறங்கிய ரிஷாப் , ஸ்ரேயாஸ் இருவரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 288 ரன்கள் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷெல்டன் கோட்ரெல் ,கீமோ பால் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.
இந்நிலையில் இப்போட்டியில் 25 -வது ஓவரின் முடிவில் இந்திய அணி 109 ரன்கள் எடுத்து இருந்த போது மைதானத்திற்குள் நாய் புகுந்தது.இதனால் போட்டி சிறிது நேரம் நடைபெறவில்லை. நாயை மைதானத்தில் இருந்து வெளியேற்ற பணியாளர்கள் முயன்ற போது யாரு கையிலும் சிக்காமல் மைதானத்தை சுற்றி வந்தது.பின்னர் சிறிது நேரம் கழித்து மைதானத்தில் இருந்து நாய் சென்று விட்டது.
நாய் மைதானத்தில் இருந்து வெளியேறிய பிறகே போட்டி நடைபெற்றது.மைதானத்தில் நாய் வலம் வந்த வீடியோ வெளியாகி உள்ளது.சமீபத்தில் ராஞ்சி கோப்பை தொடரில் பாம்பு ஓன்று போட்டி துவங்குவதற்கு முன் மைதானத்தில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.