தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. நடந்து முடிந்த அந்த இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.
அதனை தொடர்ந்து இன்று கோப்பை யாருக்கு என்பதனை தீர்மானிக்கும் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று பார்லில் உள்ள போலன்ட் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. வெற்றியை பெற்று கோப்பையை வெல்லவேண்டும் என்ற முனைப்பில் இரண்டு அணியும் களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி
ரீசா ஹென்ட்ரிக்ஸ், டோனி டி ஸோர்ஸி, ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம்(C), ஹென்ரிச் கிளாசென்(WK), டேவிட் மில்லர், வியான் முல்டர், கேசவ் மகராஜ், நந்த்ரே பர்கர், லிசாட் வில்லியம்ஸ், பியூரன் ஹென்ட்ரிக்ஸ்
இந்திய அணி
சஞ்சு சாம்சன், சாய் சுதர்சன், ரஜத் படிதார், திலக் வர்மா, கே.எல். ராகுல்(w/c), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…